இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் கும்ப ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த 2018-ல் பொருளாதார நெருக்கடிகளை சாமர்த்தியமாக சமாளீப்பீர்கள். கடன் வாங்கும் சூழ்நிலை வந்தாலும் அதை அறவே தவிர்ப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனை வந்தாலும் சரி சிறு சிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் எதையும் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டீர்கள்.உடல் நலத்தில் எதாவது சின்ன, சின்ன தொந்தரவுகள், பிரச்சனைகள் வந்து, சிறிதளவு வைத்திய செலவுகள் ஏற்படுவதுற்கும் வாய்ப்பு காணப்படுகிறது. வீண் விரயங்களை முடிந்த வரை தவிர்க்கவும். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் ஒரு சில பிரச்சனைகள் இருத்தலும் அதை பேசி சரி செய்து கொள்ளவீர்கள். உடன்பிறப்பு வகையில் மனஸ்தாபம் ஏற்பட்டு பின் சரியாகும். குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும். பல பெரிய பதவிகள் உங்களை தேடி வரும். தான தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண தடைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்போது அது கிடைக்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வீட்டில் வரும் பிரச்சனைகளை பேசி சரி செய்து கொள்வீர்கள். உங்கள் முன்னேற்றத்தில் சிறு சிறு தடைகளும், முயற்சிகளில் தடங்கலும் ஏற்படும், இருப்பினும் கடைசியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். செலவினங்கள் அதிகமாவதால் கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம். சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். உறவினர்களுடன் சில நேரங்களில் மனஸ்தாபம் வரலாம். குடியிருக்கும் வீட்டை. மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். முன்னேற்றத்திற்கான சூழ்நிலை மிகவும் பிரகாசமாக காணப்படுகிறது. பண புழக்கம் மிகவும் தாராளமாக இருக்கும். சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றி புது வீடு வாங்குவர். பல ஆடம்பர பொருட்களை வாங்குவதன் மூலம் சந்தோசம் அடையும் வாய்ப்பு உண்டு. பணம் நடமாட்டம் தாராளமாக இருக்கும். புத்திசாலித்தனமாக பணத்தை சேமிக்கவும், அல்லது பத்திரமான முறையில் பணத்தை சேமிப்பது நல்லது. குடும்பத்தில் எல்லோருடைய ஒத்துழைப்பும் தாராளமாக கிடைப்பதால் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும்.
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த புது வருடத்தில் உற்சாகமான பலன் கிடைக்க போகிறது, அனால் அதற்காக நீங்கள் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. தொழில் வகையில் இருந்த போட்டி குறையும். தொழில், வியாபாரத்தில் முடிந்த வரை புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.
இந்த ஆண்டு நீங்கள் எதிர்பார்க்கும் பல நல்ல விஷயங்கள் நடக்கும் ஆண்டாக அமையும்.
பரிகாரம் : பைரவரை மனதார வணங்கி வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2018ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831